search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதிமுக பிரமுகர் கைது"

    பிரதமர் மோடியின் மதுரை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை பேஸ்புக்கில் அவதூறாக சித்தரித்த ம.தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர். #pmmodi #mdmk

    சீர்காழி:

    மதுரை வரும் பிரதமர் மோடிக்கு ம.தி.மு.க. சார்பில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என வைகோ ஏற்கனவே அறிவித்திருந்தார்.

    இதற்கிடையே பிரதமர் மோடியின் தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேஸ் புக்கில் அவதூறாக கருத்துகளை வெளியிட்ட ம.தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவம் பற்றி விவரம் வருமாறு:-

    நாகை மாவட்டம் சீர்காழி ஞானசம்பந்தர் தெருவை சேர்ந்தவர் சத்தியராஜ் பாலு (வயது 48). இவர் ம.தி.மு.க. நகர செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவர் பிரதமர் மோடி இன்று மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேக் புக்கில் அவதூறாக கருத்துகளை நேற்று வெளியிட்டு இருந்தார். இதுபற்றி அறிந்த சீர்காழி பா.ஜனதா நகர தலைவர் செல்வம் தலைமையில் இந்து மக்கள் கட்சி, விசுவ இந்து பரிசத் , இந்து முன்னணி அமைப்புகளை சேர்ந்தவர்கள் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதையடுத்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து ம.தி.மு.க. நகர செயலாளர் சத்தியராஜ் பாலுவை கைது செய்தனர். மேலும் அவர் மீது அவதூறு தகவல் பரப்புவது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடியை விமர்சித்த ம.தி.மு.க. பிரமுகர் கைதான சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆதரவாளர் கொலையில் அ.தி.மு.க. செயலாளர் மற்றும் ம.தி.மு.க. பிரமுகர் கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது 47). முதல் நிலை காண்டிராக்டராக இருந்து வந்தார். மேலும் கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க. மாணவரணி துணை செயலாளராக பதவி வகித்தார். இவர் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

    இந்நிலையில் கடந்த 23-ந் தேதி காலை தனது காரில் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் உள்ள தனியார் பஸ் உரிமையாளரை சந்தித்து விட்டு அவரது வீட்டு வாசலில் காரில் அமர்ந்து இருந்தார். அப்போது காரில் வந்த மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் ரமேஷ்பாபுவை படுகொலை செய்தனர். அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் ஆதரவாளர் ரமேஷ்பாபு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை குறித்து விசாரிக்க தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வந்தது.

    இந்த நிலையில் ரமேஷ் பாபுவை கொலை செய்ததாக கூலிப்படையை சேர்ந்த சீர்காழியை சேர்ந்த பார்த்திபன், கட்டை பிரபு, பிரேம்நாத் ஆகியோர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதனை அறிந்த தனிப்படை போலீசார் மற்றும் புதுப்பட்டினம் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் கடந்த 27-ந் தேதி 3 பேரையும் சீர்காழிக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே ரமேஷ்பாபு கொலை தொடர்பாக கூலிப்படையை சேர்ந்த கார் டிரைவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த தமிழரசன் என்பவர் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்தார். இந்த நிலையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் சீர்காழிக்கு வந்து விசாரணை நடத்தினார். அ.தி.மு.க. பிரமுகர் ரமேஷ்பாபு கொலை செய்யப்பட்ட பிடாரி வடக்கு தெருவுக்கு சென்று விசாரணை நடத்தினார்.

    இதற்கிடையே கூலிப்படையை சேர்ந்த பார்த்திபன், கட்டை பிரபு, பிரேம்நாத் ஆகியோரை காவலில் எடுத்து தனிப்படை போலீசார் விசாரித்தனர்.

    அப்போது ரமேஷ்பாபு கொலையில் கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெயராமன் (55) மற்றும் ம.தி.மு.க. மாநில இளைஞரணி துணை செயலாளர் மார்க்கோனி (47) ஆகியோர் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயராமன், ம.தி.மு.க. பிரமுகர் மார்க்கோனி ஆகிய 2 பேரையும் நேற்று இரவு தனிப்படை போலீசார் கைது செய்தனர். போலீஸ் டி.எஸ்.பி.க்கள் சீர்காழி சேகர், மயிலாடுதுறை வெங்கடேசன், இன்ஸ்பெக்டர்கள் சீர்காழி சிங்காரவேலு, பொறையாறு செல்வம், கொள்ளிடம் முனிசேகர் ஆகியோர் கைது செய்து சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சிவராஜ் இல்லத்துக்கு ஜெயராமன், மார்க்கோனி ஆகியோரை ஆஜர்படுத்தினர். அவர்கள் 2 பேரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இதையடுத்து 2 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டனர்.

    அ.தி.மு.க. பிரமுகர் ரமேஷ்பாபு கொலைக்கு தொழில் போட்டி மற்றும் அரசியல் போட்டியே காரணம் என தெரிய வந்துள்ளது.

    ரமேஷ்பாபு குறுகிய காலத்திலேயே அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் ஆதரவாளர் ஆனார். இந்த செல்வாக்கை பயன்படுத்தி மணல் குவாரி, மற்றும் பல்வேறு ஒப்பந்த பணிகளை காண்டிராக்ட் எடுத்து கோடிக்கணக்கில் சம்பாதித்தார். இதனால் அவர் மீது பலருக்கு பொறாமையும், போட்டியும் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் படுகொலை செய்யப்பட்டது தனிப்படை போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இந்த கொலை வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் அ.தி.மு.க. செயலாளர் மற்றும் ம.தி.மு.க. பிரமுகர் கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×